கந்தளாயில் அழுகிய நிலையில் ஏழாயிரம் கிலோ மரக்கறிகள் மீட்பு.

 எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில்  கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழாயிரம் கிலோ மரக்கறி வகைகள் அழுகிய நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் மரக்கறிகளை தெரிந்தெடுத்த சம்பவமொன்று கந்தளாய் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன நகர மண்டபத்தில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையில் கந்தளாய் பிரதேச மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ள கரட்,கோவா,ராபு,லீஸ் மற்றும் பூசனிக்காய்,போஞ்சி போன்ற ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கறி வகைகளே பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அழுகிய நிலையில் நான்கு இலட்சத்திற்கும் கூடுதலான பணம் வீண் விரையமாக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இவ்வாறு அழுகிய நிலையில் வீனாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அழுகிய நிலையில் வீணாக்கப்பட்ட மரக்கறிகள் தொடர்பாக படம் எடுப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.