கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 63 பேர் குணமடைந்துள்ளதுடன், 165 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று பலாலி தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 4768 பேர் கொரோனா தொற்று குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்