காங்கேசன்துறையில் உலர் உணவு வழங்கல்!

காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த 20 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.

வேலணை பிரதேசசபையின் வருமானவரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், அவரது நண்பரும் புலம்பெயர் தேசத்து நல்லுள்ளம் படைத்த அன்பருமாகிய ஒருவரிடமிருந்து பெற்ற நிதியுதவியிலேயே இந்த நல்ல கைங்கரியம் நடைபெற்றது.

உலர் உணவு வழங்கும் நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தள ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகதர் லயன் சி.கௌரீஷன் ஆகியோர் கலந்து வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்