வாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி…

இவ்வருடத்திற்கான சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி  திணைக்களப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

குறித்த பகுதிகளில் இம்முறை 3,100 விவசாயிகள் 14,300  ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன்கருதி மூன்று வகையான உர விநியோகத்தையும் கமநல அபிவிருத்தி  திணைக்களம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்