தமிழ் சி.என்.என்.குழுமத்தின் நிவாரணப் பணி தென்மராட்சியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே மட்டுவில் வளர்மதி சனசமூக நிழைவயத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை மட்டுவில் பகுதியிலும் தொடர்ந்து கைதடிநுணாவில், சரசாலை ஆகிய பகுதிகளிலும் சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தமிழ் சி.என்.என். , புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய செயற்பாடு, தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தினரால் மட்டுவில் பகுதியில் நெறிப்படுத்தப்பட்டது. தென்மராட்சி பகுதியில் பகுதியில் இவர்களின் செயற்பாட்டுக்கு கைதடி – நுணாவிவைப்  பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணசீலன் இராகுலன், இராமநாதன் மதியுகன் (மதி) ஆகிய நல்லுள்ளம் படைத்த அன்பர்களும் அனுசரணை வழங்கி இவர்களின் இந்த வறுமை ஒழிப்புப் பணிக்கு உதவியுள்ளனர்.

இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த வி.லோஜன், தமிழ் சி.என்.என். குழும உறுப்பினர்களான புவிராஜ், வினுசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகள் அதன் தலைமையகம் அமைந்துள்ள தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்படுவதுடன், தீவகம், யாழ்ப்பாணம், வலிகாமம் என பரவலாக வழங்கப்பட்டு வருகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்