65 பேர் குணமடைவு 166 பேர் சிகிச்சையில்: கொரோனா இன்றைய நிலை!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 இலிருந்து 65 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆகக்  காணப்படுகின்றது.

இவர்களில் 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் 04 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டனர் எனவும், மற்றைய நபர் வீட்டிலிருந்து அடையாளம் காணப்பட்டார் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 166 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 144 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.