கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் இன்றும் ஈடுபட்டனர்.
இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை பொலிஸ் ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதியில் மக்கள் தமது உணவு தேவைகளிற்காக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டினர். இதேவேளை வங்கி நடடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
ஊயிர்த்தஞாயிறு அதனை தொடர்ந்து சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் காணப்பட்ட நிலையில் இன்று தளர்த்தப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சமுர்த்தி, சமுர்த்தி அல்லாதோருக்கான பணம், முதியோர் உதவி தொகை உள்ளிட்டன கிடைத்துள்ள நிலையில் இன்றைய தினம் மக்கள் ஆர்வமாக அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை