ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்க நாங்கள் தயார்…

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்க நாங்கள் தயார்- எம்மிடம் நிதி உள்ளது கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாளிதன்
கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் அ.வேலமாளிதன்தலையைில்  இன்றையதினம் கொரோனா நோயினை தடுப்பதற்கான விசேட அமர்வு ஒன்று இடம் பெற்றது.
அதன் பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தவிசாளர்.
நாம் எமது சபைக்கு ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கமநல தினைக்கலங்கள் சமூர்த்தி அலுவளகங்களில் தற்போது அதிக மக்கள் நடமாற்றம் உள்ளமையினால் அவற்றில் விசேட தொற்று நீக்கிகளை நீக்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதுடன் மரண சடங்குகள் இடம் பெறும் இடங்களிலும் தொற்று நீக்கிகள் தூவுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.
அத்துடன் மக்களிற்கு உலர் உணவு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன் மக்களிற்கு தன் ஆர்வ தொண்டர்களால் மாத்திரமே  உலர் உணவுகள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது என்றும் இது வரை அரசாங்கத்திணால் முறையான உலர் உணவுகள் எதுவும் வழங்கப்படவில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதாக கூறினார்.
அத்துடன்
அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற மாற்று வலுவுடையோருக்கான நிவாரணம் கொடுப்பனவு மாவட்டத்தில் இருக்கின்ற முழுமையான  மாற்று வலுவுடையோருக்கும் வழங்கப்பட வில்லை என சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அத்துடன் சமூர்த்தி அல்லாதவர்களுக்கான கொடுப்பனவு பெறும்பாலனவர்களுக்கு கிடைக்க பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்
எனிவரும் காலத்தில் பொருளாதார மந்தம் ஏற்படும் சாத்திய பாடு உள்ளதால் மக்களிற்கு உணவுபொருட்களை வழங்குவது மாத்திரம் அல்லாது  விவசாய நடவடிக்கைகளை பிரதேசபை ஊக்குவிற்க வேண்டிய கடைப்பாடு உள்ளதாக சபை உறுப்பினர்கள் கூறினார்கள். அதற்கான நிதி எம்மிடம் உள்ளது ஆனால் இந்த திட்டத்திற்கு  ஆளுனரின் அனுமதி கிடைக்குமா என்பது சிந்திக்க வேண்டியது
ஏன் என்றால் ஏற்கனவே பிரதேசசபைகளின் ஊடாக நாங்கள் உலவர் உணவுகளை வழங்குவதற்கு ஆளுனர் அனுமதி மறுத்திருக்கின்றார் அவ்வாறு இருக்கும் போது இத்தகையான விவசாய நடவடிக்கைகளுக்கும் அனுமதிகிடைக்காது என்ற நிலவரம் காணப்படுகின்றது என குறிப்பிட்டதுடன் ஆளுனர் அனுமதி வழங்கினால் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.