ஊரடங்கு சட்டத்தை மீறிய 29 ஆயிரத்து 694 பேர் கைது!
ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 7 ஆயிரத்து 646 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரங்கு சட்டத்தை மீறிய 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 72 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை