‘ஈஸ்டர்’ தாக்குதலில் கொல்லப்பட்டோரை  வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருவோம்   – பேராயா் மெல்கம் ரஞ்சித் அழைப்பு

இலங்கையில் கடந்த வரும் ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் ககுண்டுத் தாக்குதகளில் கொல்லப்பட்டவா்களை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சரியாக 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயா் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநேரத்தில் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவுகூரலில் பங்கேற்குமாறும் அவா் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தவிர எந்த நினைவு நிகழ்வுகளையும் இவ்வாண்டு நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் பேராயா் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த தொடர் விசாரணைகளுக்காகப் பேராயா் தனது நன்றியையும் இதன்போது தெரிவித்தார்.

தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்வதற்காக அரசுக்கு அவா் பாராட்டும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களின் சதித்திட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையேயான சமாதானத்தை சீர்குலைக்க சதி செய்தால் அவர்கள் யாராயினும் சமூக அந்தஸ்து அல்லது அவர்கள் வகிக்கும் பதவிகளைப் பொருட்படுத்தாமல் தகுந்த தண்டனை வழங்கப்படுவதும் முக்கியம் எனவும் அவா் அழுத்தமாகத் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு நாம் தடுக்க முடியும். அதனை உறுதி செய்வது பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் எங்களுக்கு விதிக்கப்பட்ட கடமை எனவும் அவா் கூறினார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளைத் தொடரவும், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவும் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் அவா் கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.