கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் -பொது இடங்கள் கடைதொகுதிகளுக்கு கிருமி அழிப்பு விசுறும் நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனை மற்றும் சாய்ந்தமருது எல்லையில்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை(17) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  கல்முனை பொதுப்பணி மன்றத்தின் தலைவர் எஸ்.எல் அமீர் வழிநடத்தலில் கல்முனை மாநகர சபையின் உதவியுடன்    கிருமிநாசினி விசிறி தொற்று நீக்கும் பணிகள் கட்டம் கட்டமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இச்செயற்திட்டமானது  சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன்    கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான   சட்டத்தரணி ஏ.எம்.ரோசன் அக்தர், எம்.எஸ்.எம். சத்தார், எம்.நிசார்  கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.