ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், கசிப்புடன் ஒருவரும் கைது

க.கிஷாந்தன் 

அட்டன்,  கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொட்டகலை பத்தனையிலும் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீடர் கோடாவுடன்  நபரொருவர் இன்று காலை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

அட்டன், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கினிகத்தேனை ரஞ்சுராவ பகுதியில் 940 மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த மூவரும், பத்தனை பொரஸ்கிறிக் தோட்ட பகுதியில் 40 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை, சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபடும், விற்பனை செய்யும் நபர்களை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் கலால் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்