ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!!
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த சந்தேக நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிராதான வீதியில் பொதி ஒன்றுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமிலுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் வெள்ளிக்கிழமை(17) நடமாடும் மரக்கறி விற்பனையாளர் மாறுவேடத்தில் சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான சார்ஜன் ஏ.எல்.எம் நவாஸ் கன்டபிள்களான ஏ.எல் ஹிதாயதுல்லாஹ் மற்றும் செலர்ட் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹாதி ஆகியோர் சந்தேக நபரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுமார் 21 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 30 லீட்டருக்கு அதிகமான வடிசாராயம் விற்பனைக்காக கொள்கலன் ஒன்றில் எடுத்து செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனது.
கருத்துக்களேதுமில்லை