வவுனியா சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அமைந்துள்ள சிறுவர் இலங்களில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சிவன் கோயில் அருளகம் சிறுவர் இல்லங்கள் மற்றும் டொன்பொஷ்கோ சிறுவர் இல்லங்களில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நகர சபையின் தீயணைப்பு வாகனங்களால் சிறுவர் விடுதிகள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டு மருந்துகள் விசிறப்பட்டிருந்தது.

இதேவேளை,  வவுனியா நகரசபை மற்றும் சுகாதாரப் பிரிவினர், விசேட அதிரடிப் படையினரின் ஏற்பாட்டில் வவுனியாவின் நகர்ப் பகுதிகள் புதிய பேருந்து நிலையம், வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகிளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.