தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் வீடுகளுக்கு

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பனிச்சங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்களில் 20 பேர் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் நேற்று தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்