நிரந்தர வருமானம் அற்ற சுமார் காரைதீவு சாய்ந்தமருது 400 குடும்பங்களுக்கு சொர்ணம் குழுமம் உதவி

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் (ஊழுஏஐனு 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற காரைதீவு சாய்ந்தமருது தமிழ் பேசும்  சுமார் 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியினை சொர்ணம் குழுமம்  மேற்கொண்டது.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதில் 300 குடும்பங்களும் சாய்ந்தமருது பகுதியில் 100 குடும்பங்களுக்கும் வெள்ளிக்கிழமை(17) மாலை சொர்ணம் குழுமத்தின் ஸ்தாபகர் முத்துப்பிள்ளை விஸ்வநாதனின் வழிநடத்தலில் குறித்த நிவாரணப்பணிகள் இடம்பெற்றன.

இதன் போது சாய்ந்தமருது பகுதியில் இக்குழுமத்துடன் இணைந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் அன்சார் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிவாரண பொதியில் அரிசி சமன் டின் மா சீனி என்பன உள்ளடங்குகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்