இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனாவில் இருந்து நலம்பெற்றனர்!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்த குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குணமடைந்தோரின் எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரை 70 பேராக இருந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று புதிதாக நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 242 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 158 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதோடு, கொரோனா தொற்று சந்தேகத்தில் 148 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்