இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும்நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளான 242 பேரில் 77 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 7 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், 164 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதோடு, கொரோனா தொற்று சந்தேகத்தில் 148 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.