பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன வவுனியாவுக்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

முல்லைத்தீவு, கேப்பாபிலவு இராணுவ முகாமிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த அவர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைகளின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் முப்படையினர், பொலிஸார் ஆகியோர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர் வவுனியாவின் தற்போதைய களநிலமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.

இந்நிகழ்வில், வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹிததர்மசிறி, விமானப் படைத் ததளபதி எயார் மார்சல் சுமங்கல டயஸ், தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம், வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ, பொலிஸ், விமானப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்