தமிழ் சி.என்.என். குழுமத்தினரால் வழங்கப்பட்ட ஆடு ஊரடங்கு நேரத்தில் இறைச்சிக்காக களவாடப்பட்டது!

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் ஆடு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டிய ஐவர் கையும் மெய்யுமாக இறைச்சியுடன் பிடிபட்:டு கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சி.என்.என். புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி 2018 – 2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குமாக தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு நல்லிண யமுனாபாரி ஆடுகளை வழங்கினார்.

இவ்வாறு பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியில் வழங்கப்பட்ட ஆடு ஒன்றே இவ்வாறு திருடர்களால் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.

கொறோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சட்டம் – ஒழுக்கு மிகவும் இறுக்கமாக உள்ள நிலையில் – ஊரடங்கில் சாதாரணமாக நடமாடுவோர் கைதுசெய்யப்படுகின்ற இந்த நேரத்தில் – மிகவும் துணிகரமாக ஆட்டை களவாடி இறைச்சிக்காக இந்தத் திருடர்கள் வெட்டியுள்ளார்கள்.

இவர்கள் ஐவரும் கொடிகாமம் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.