புலம்பெயர் உதவியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் மக்களுக்கு புலம்பெயர் நல்லுள்ளம் படைத்த அன்பர் ஒருவரின் நிதி அனுசரணையில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1995 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கல்விகற்று, தெல்லிப்பழை தந்தை செல்வாபுரத்தில் வசித்து, தற்போது லண்டனில் வசிக்கின்ற அன்பர் ஒருவர் தனது பிரதேசத்தின் மீதும் தாய் மண்ணின் மீதும் பற்றுக்கொண்டு 30 ஆயிரம் ரூபாவை வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரனுக்கு அனுப்பி 15 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

அவரது கோரிக்கைக்கு அமைவாகவே தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷூம் கலந்து வழங்கிவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்