கொரோனா வைரஸ் – உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் கைது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை  பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, அங்கொடை, பொல்கஹவெல, பெலிகல, கட்டுகஸ்தோட்டை, வெலிமடை, கடவத்தை, ராகம,  நொச்சியாகம மற்றும் மீரிகம, திவுலதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளான்.

இந்த 16 பேரில் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 10ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான  காலபப்குதியில் கைது செய்யப்பட்டவர்களாவர் என்றும் 9 பேர் அதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நேற்றைய தினமும், ஐ.தே.க. யின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக கருதப்படும் மீரிகம, திவுலதெனிய பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரை சி.ஐ.டி. கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குறித்த பெண்ணை 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.