கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாஸா நலன் சேவைகள் அமைப்பின் பணிகள்…

கொரோனா வைரஸ் தோற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம், முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்லும் மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) இடம்பெற்றது.

கல்குடா தொகுதியில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வை கோறளைப்பற்று மேற்கு ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு முன்னெடுத்தது.

அத்தோடு பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்புப் பெறுவது தொடர்பான சுவரொட்டிகளும் ஒட்டி வைக்கப்பட்டன.

இதில் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இப்பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்