கிளி ,முல்லை மாவட்டங்களில் 18 லட்சங்களுக்கு மேல் நிவாரணம்…

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும்  எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம்  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் கிளிநொச்சியி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்,மாற்றுத் திறனாளிகள்  என அனைவரும்  அன்றாட உணவுக்கு அல்லல் படுகின்றமையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு நிவாரனப்பணியை ஆரம்பித்து

இதுவரை  இலங்கை ரூபா பதினெட்டு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட  உலருணவுப் பொதிகள் தயார் படுத்தப்பட்டு தர்மபுரம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஊடாக கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட  1114 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது

குறுகிய காலத்தில் பதினெட்டு லட்சம் ரூபாவிற்கு நிவாரனப்பணியை குறித்த அமைப்பு கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களில் மட்டும் முன்னெடுத்துள்ளது அதனை விட அம்பாறை மாவட்டத்திலும் பல லட்சம் ரூபாவில் நிவாரனப்பணியை  செய்து வருகின்றது இதேபோல் குறித்த அமைப்பு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து  மாவட்டங்களிலும் இதன்  தொடச்சியாக பணியை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.