இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

695 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.