வெளிநாடுகளில் சிக்கியுள்ள 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவாகினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள கிட்டத்தட்ட 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த விசேட செயற்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமையை இதுவரை 59 ஆயிரத்து 419 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுள் 21 ஆயிரத்து 575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இணைந்து மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான நிவாரணப்பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்