ஓட்டமாவடி – மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் நிலையம் உடைக்கப்பட்டு TV திருட்டு!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்)  உடைத்து அதிலிருந்த பெறுமதியான எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கிளினிகுக்கு வரும் குழந்தைகளுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஒளிப்பதிவுக் காட்சிகளை காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.