நுவரெலியா சுப்பர் மார்க்கட்டில் தீ

(க.கிஷாந்தன்)

நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  பகுதியளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து 18.04.2020 அன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸார், மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், பொது மக்கள், இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்