சுமந்திரனின் நிதியில் அளவெட்டியில் உலர் உணவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில் அளவெட்டிப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

உலர் உணவுகளை வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜூடன் இணைந்து வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்