சுமந்திரனின் நிதியில் அராலியில் உலர் உணவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில்அராலிப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 31 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவராஜா கஜன் , எம்.ஏ.சுமந்திரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை