கொரோனா’ அச்சுறுத்தல் இன்னமும் தொடர்கின்றது – சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் கருத்து…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றிலுமாக நீங்கிவிட்டதாக எனது பெயரை மேற்கோள் காட்டி சில ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு எந்தக் கருத்தையும் நான் வெளியிடவில்லை. கொரோனாவின் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டோம் என்றே கூறியிருந்தேன். இதன் அர்த்தம் கொரோனா வைரஸ் ஆபத்து – அச்சுறுத்தல் இலங்கையில் முழுமையாக நீங்கவிட்டது என்பதல்ல.

இப்போதும் வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்து நீங்கிவிட்டதாகக் கூறமுடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.