இராகலையில் திடீர் சுற்றி வளைப்பு – கசிப்பு மற்றும் போதைப்பொருளுடன் மூவர் கைது…

நுவரெலியா, இராகலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இராகலை பொலிஸார் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரையும், மதன மோதக என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார், அங்கு சென்று சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 5 லீற்றர் கோடா, மற்றும் ஸ்பீரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு அப்பகுதியில் மதன மோதக என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவற்றையும் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.