வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் வழங்கும் காலம் நீடிக்கப்பட வேண்டும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்லினை தொடர்ந்து மலையக தோட்டப்புறங்களைச் சேர்ந்த பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர்.இந்நிலையில் அரசாங்கம் இவர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுவருகின்றது.எனினும் தோட்டப்புறங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அளவுக்கற்ற அதாவது 5000 ம் 10000 என மக்கள் தொகை காணப்படுகின்றமையினாலும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதனாலும்.இந்த விண்ணப்பங்கள் கொடுப்பனவு பெற தகுதியானவர்களுக்கு சென்றடைவது ஒரு கடினமான விடயமாகவே காணப்படுகின்றது.எனவே இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலத்தினை அரசாங்ம் நீடிக்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ள்ளார்.

அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார. அவர் அதில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
நிவாரணங்கள் பெறாத குடும்பங்களுக்கான நாடு முழுவதும் வறிய விண்ணப்பங்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மவாட்டத்தில் இந்த கொடுப்பனவுகளை பெற தகுதியான பல குடும்பங்களுக்கு விண்ணங்களுக்கு இது வரை கிடைக்காத நிலையிலேயே உள்ளனர்.
குறித்த விணணப்பங்கள் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸத்தர்கள்,கிராம சேவகர்கள் ஆகியவர்கள் ஊடாகவே வழங்கப்படுகின்றன.

ஆனால் போதுமான அளவு இந்த உத்தியோகஸ்த்தர்கள் நுவரெலியா மாவட்டத்தில் கொண்டு                    இயலாததனாலும் சனத்தொகை அதிகமாக காணப்படுவதனாலும் இந்த விண்ணப்பங்கள் உரிய நேரத்தில் உரியவர்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்த மக்கள் இருக்கின்றனர்.

தோட்டப்புறங்களில் உள்ள கிராம சேவகர் பகுதிகளில் விஷாலமான மக்கள் தொகை காணப்படுவதனால் இவர்களின் தகவல்கள் திரட்டி அனுப்பவது இவர்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாகவே காணப்படுகின்றது.எனவே இவர்களுக்கு உதவும் முகமாகவும் உரிய தரப்பினர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். என்தற்காகவும் கால நீடிப்பு அவசியமானதாக காணப்படுகின்றது.கடந்த காலங்களில் நிவாரணங்கள் வழங்கும் போது இந்த நிலமையகள் காரணமாக பலருக்கு நிவாரணம் கிடைக்காமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் மேலும்; தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.