5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு விவகாரம்: சமுர்த்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்…

சமுர்த்தி உத்தியோகத்தர்
மீது பொல்லால் தாக்குதல்

மாத்தறை – கொட்டப்பொல பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

48 வயதான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுத் தருமாறு கோரி இளைஞர் ஒருவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தெனியாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெனியாய , கொலவெனிகம – குடகலஹேன பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.