சீன அரசால் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்…

கொரோனா வைரஸ் பரிசோதனைக்குத் தேவையான 10 ஆயிரம் ஆய்வுகூட கட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சீன அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவற்றில் முகக் கவசங்களும் அடங்குகின்றன என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொரோனா ஒழிப்புக்குத் தேவையான உதவிகளை சீன அரசு வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்