அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றினூடாக உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக நிவாரண விலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.