கொரோனா ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க!

கொரோனா நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் கொரோனா வைரசின் ஆபத்து குறைந்திருப்பதாக, நான் தெரிவித்ததாக முக்கிய பத்திரிகையொன்றில் தலைப்பு செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தலைப்பு செய்தி பெரும்பாலும் பிழையானது. இருப்பினும் இந்த செய்தியின் உட்பகுதியை வாசிக்கும் பொழுது இந்த விடயம் கிடைக்கப்பெற்றதன் கூற்று என்ன என்பது தெளிவாகின்றது

உண்மையில் எடுத்துக்கொண்டால் தற்பொழுது இலங்கையில் கொவிட் 19 தொடர்பில் சமூக அளவிலும், சமூக பரவலும் அதாவது அப்படியும் இல்லை என்றால் Social Transmission நிலைமை இல்லை என்பதாகும்.

இது உண்மையில் சொல்லப்படும் Clusters இற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தவரையறைக்குட்பட்ட விடயங்கள் கிடைக்கப்பெற்றமை தொடர்ச்சியாக பெறப்பட்ட செயற்பாட்டு வழிமுறைகள் ஊடாக ஆகும்.

அப்படியென்றால் இந்த நிலைமைக்கு எம்மால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக தனிந்துவிட்டது என்று கூறமுடியாது என்பதாகும். இந்த பத்திரிகையில் இந்த விடயம் குறிப்பிடப்படுவது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்காலத்தில் சுகாதார அமைச்சைப் போன்று பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து துறைகளும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இது சரியானதாகும். இதற்கமைவாக எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் இந்த நாட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அது ஏனென்றால் இந்த ஆபத்து தொடர்ந்தும் இடம்பெறக்கூடும் என்பதாகும்.

இருப்பினும் வேறு எதனையும் எம்மால் தெரிவிக்க முடிகின்றமை இந்த நாட்டில் கொவிட் 19 நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது. இருப்பினும் தற்போதைய நிலவும் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து இவ்வாறு அனர்த்த நிலை கட்டுப்பாட்டை மேலும் முன்னெடுப்பதன் மூலம் இங்கு கூறப்படும் ஆபத்தான நிலையை முழுமையாக எதிர்காலத்தில் குறைப்பதற்கு சில கால எல்லைக்குள் எம்மால் முடியும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.