தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து பல்வேறு வதந்திகள் உலாவுகின்றன – மஹிந்த தேசப்பிரிய!
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல் ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படும் தினம் எனக்கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடத் தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை