மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்!

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த 24 பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க புர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்