கொழும்பு உட்பட இடர் வலையங்களில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக அரங்கம் அறிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் காலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பிலிருந்து 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் புதன்கிழமை ஊரடங்கு நீக்கப்படவிருந்த 04 மாவட்டங்களின் ஊரடங்கு தொடர்ந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், குறித்த மாவட்டங்களில் இருந்து வௌியேறவும் உள்நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதர மாவட்டங்களில் எதிர்வரும் 24ம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும் இரவு 08 மணி முதல் அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு அமுலாகவுள்ளதுடன் குறித்த மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ம் திகதி இரவு 08 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு 27ம் திகதி அதிகாலை 05 மணி வரை தொடரும்.

ஊரடங்கு காலப்பகுதிக்குள் விவசாயத்துறை மற்றும் அத்தியாவசிய சேவையினருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் தொடர்ந்தும் அமுலிலிருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்