வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழிர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர்.

இதன்போது வவுனியா பிரதேச செயலகத்தின் வாயிலில் தேவையின் பொருட்டுவரும் மக்களை ஒழுங்கமைப்பு செய்வதற்காக நுழைவாயிலில் இலக்கம் வழங்கப்பட்டு மக்கள் சீராக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கைகளை கழுவி செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏனைய அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்கள் கணிசமாக வருகை தந்திருந்ததுடன் ஏனைய மாவட்டங்களுக்கு சென்றிருந்த உத்தியோகத்தர்கள் கணிசமாக சமூகமளித்திருக்கவில்லை.

வவுனியா மொத்த வியாபார மரக்கறி சந்தையில் மரக்கறிகள் அதிகளவில் குவிந்து காணப்பட்டதுடன் அவை வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை பேரூந்து சேவையின் வவுனியா சாலையினால் உள்ளுர் சேவைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரம் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக மரக்கறி உட்பட ஏனைய வியாபாரங்களும் இடம்பெற்றுவந்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.