முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளார்.

தான் பிணையில் வெளிவந்தமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க முகநூலில் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்