மேலும் ஒருவர் பூரண குணமடைந்தார் – மொத்த எண்ணிக்கை 97 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதன்படி தற்போது வரை 97 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 295 பேர் (இன்று மட்டும் 24 பேர்) இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 191 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்