அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு…

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டன.

திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றங்கள் சம்மாந்துறை பகுதியில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமானதை அவதானிக்க முடிந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டது.இதன் போது ஊரடங்கு சட்டத்தை மீறி கைதானவர்களின் மனுக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்காக கைதானவர்களின் வழக்குகள் என்பன விசாரிக்கப்பட்டுள்ளன.

மேலும்  நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட ,நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை  உடனடியாக இயங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கேட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்