மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு காகித நகர் கிராம உத்தியோகத்தரை கடந்த வெள்ளிக்கிழமை (17) தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (20) திங்கட்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிப் பகிஸ்கரிப்பு உரிய நபரைக் கைது செய்யும் வரை தொடரும் என்று ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை