வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன.
பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவதற்கான ஒலிபெருக்கி சாதனங்களே வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த சாதனங்கள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிறி முனசிங்கவால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மானவடுவிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பத்மசிறி முனசிங்க, வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை