வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கி நடவடிக்கைகளும் அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் வழமைபோன்று தமது கருமங்களை நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி சேவைச் சந்தை உள்ளிட்ட நெருக்கமான பகுதிகளில் முறையான சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதுடன், மக்கள் முகக்கவசம் அணிந்தவாறு பாதுகாப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்