தொற்று 303 * குணமடைவு 97 * சிகிச்சையில் 199 இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம்!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 இலிருந்து 303ஆக அதிகரித்துள்ளது.

இன்று (20) மாலை 4 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இன்று (20) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 303 பேரில் தற்போது 199 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 97 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 122 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்