யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை…

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என நாம் விரும்பினோம்.
தக்கவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால் நாம் பல்வேறு பிரதேசங்களையும் அங்குள்ள நிலவரங்களையும் ஆராய்ந்தோம். கோறளைப்பற்று வடக்கு, வாகரை உதவிப் பிரதேச செயலாளர் கே அமலினி, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் ரீ. தவநேசன் மற்றும் கிராம சேவை அலுவலர் ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பில் உள்ள மாங்கேணி மற்றும் காயங்கேணி ஆகிய கிராமங்கள் இனங்காணப்பட்டன. சுமார் 450 குடும்பங்கள் உதவியை எதிர்நோக்கியுள்ள இந்த கிராமங்களில் பெரும்பாலானோர் ஆதிவாசிகள் பரம்பரையினராகவும், அன்றாட சீவனோபாயத்திற்காக மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாகவும் உள்ளனர்.
நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையும், ஊரடங்கு சட்டமும் அவர்களது அன்றாட வாழ்வைப் பாதித்திருந்தது. ஆகவே எமது உதவிகளின் முதற்கட்டமாக மிகவும் நலிவடைந்த பின்புலத்தைக் கொண்ட 150 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 2020 ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமையன்று கிராமத்திலுள்ள ஆலய முன்றலில் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்காக பட்டிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ரூபா 2,000 பெறுமதி கொண்ட உலர் உணவுப் பொதிகளை எமது வேண்டுகோளின் பேரில் வழங்க முன்வந்ததுடன், அதற்காக ரூபா 300,000 தொகையை நாம் செலுத்தியிருந்தோம்.
இப்பொதியில் அடங்கியுள்ளவை:
அரிசி 10 கிலோ  = 900.00
கோதுமை மா 5 கிலோ = 450.00
கருவாடு 1 கிலோ = 650.00
மொத்தம் = 2,000.00

மேற்குறிப்பிட்ட உலர் உணவுப் பொதியானது சாதாரண குடும்பமொன்றுக்கு 2 வாரங்களுக்கு உதவும் என கணிப்பிடப்பட்டுள்ளது.<

/div>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.