கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதி 25 இலட்சம் ரூபாய்க்கு அம்பாறை பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து 25 இலட்சம் ரூபாய்க்கு கல்முனை பிரதேசம், காரைதீவு பிரதேசம், சம்மாந்துறை பிரதேசம், பொத்துவில் பிரதேசம்,திருக்கோவில் பிரதேசம், அக்கரைப்பற்று பிரதேசம், நாவிதன்வெளி பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்றய தினம்(19) வழங்கி வைக்கப்பட்டன.

கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வுகளில் கோடீஸ்வரன் அவர்களின் ஆதாரவாளர்கள் என பலர் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கப்பட்டமைக்கு பயனாளிகள் தங்கள் நன்றிகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.